தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
வெளிப்பாளையம்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சார்பில் நாகை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் நக்கீரன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் தம்பிதுரை முன்னிலை வகித்தார். கூட்டுறவு துறை அதிகாரிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் முதுநிலை மண்டல மேலாளர்களாக நியமிப்பதை கைவிட வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் திறமையான அலுவலர்களை பதவி உயர்வின் மூலம் நியமிக்க வேண்டும். கொள்முதல் நிலையத்தில் தேக்கம் அடையும் நெல் மூட்டைகளை உடனே இயக்கம் செய்ய வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டெண்டர் முறையில் களப்பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மண்டல துணை செயலாளர்கள் பாஸ்கர், சுப்புரத்தினம், வாசுதேவன், ராஜமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.