இரும்பாலையில், தீபாவளி போனஸ் உயர்வு கோரி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இரும்பாலையில், தீபாவளி போனஸ் உயர்வு கோரி  தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

இரும்பாலையில், தீபாவளி போனஸ் உயர்வு கோரி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

சூரமங்கலம்,

சேலம் இரும்பாலையில் தொழிலாளர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்தி தரக்கோரி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. நலச்சங்கம் சார்பில் நேற்று காலை சேலம் உருக்காலை மெயின் கேட் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் உருக்காலை தொழிலாளர் முன்னேற்ற சங்க துணைத்தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார். சங்க பொதுச்செயலாளர் ஜி.பெருமாள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். அப்போது சேலம் உருக்காலை உள்ளிட்ட செயில் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சிவக்குமார், சரவணன், வெங்கடாஜலபதி, கவிமணி, எஸ்.சி.எஸ்.டி நலச்சங்க நிர்வாகிகள் கதிர்வேல், சுரேஷ், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி ராஜிவ் நாயர் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story