கூலி தொழிலாளி கைது
ஆர்.எஸ்.மங்கலம் அருேக சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்
தொண்டி,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது 47). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த போது அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்து அவர் வெளியே ஓடிய போது இதை பார்த்த அதே ஊரைச் சேர்ந்த சிலர் இது குறித்து சிறுமியின் தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து சிறுமி தனது தாயிடம் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக கூறியுள்ளார். உடனே சிறுமியின் தாய் திருவாடானை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் போலீசார் நல்லமுத்துவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story