மனைவியை தாக்கிய தொழிலாளி கைது


மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
x

கபிஸ்தலம் அருகே மனைவியை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடி கீழத்தெருவை சேர்ந்த அரசு (வயது37).சென்ட்ரிங் வேலை தொழிலாளி. இவருடைய மனைவி சீதலா தேவி (36). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அரசு தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி சீதலாதேவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று அரசு மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அரசு மனைவி சீதலா தேவியை உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பகவதி சரணம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசை கைது செய்தனர்.


Next Story