மனைவியின் கள்ளக்காதலனை தாக்கிய தொழிலாளி கைது
மனைவியின் கள்ளக்காதலனை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சூரமங்கலம்:-
சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 36) வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி சரண்யா (27). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பூபதியின் நண்பரான அம்மாபேட்டையை சேர்ந்த கண்ணன் (32) என்பவர் அடிக்கடி பூபதியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதனால் கண்ணனுக்கும், சரண்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது அவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா வீட்டை விட்டு வெளியேறி கண்ணனுடன் சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சரண்யாவை மீட்டு சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அங்கு சரண்யா, கண்ணனுடன் செல்வதாக கூறி எழுதிக்கொடுத்து விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் பூபதி, கண்ணனை அழைத்து பேசி உள்ளார். அப்போது பூபதிக்கும் கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது, இதில் ஆத்திரம் அடைந்த பூபதி, கண்ணனை இரும்பால் தாக்கினார், .இதில் காயமடைந்த கண்ணன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார், இது குறித்து சூரமங்கலம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்தனர்.