முதியவரின் கைவிரலை கடித்து துப்பிய தொழிலாளி கைது
உளுந்தூர்பேட்டை அருகே முதியவரின் கைவிரலை கடித்து துப்பிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஈஸ்வரகண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம்(வயது 60). இவர், அதே கிராமத்தை சேர்ந்த ஏகாம்பரம்(40) என்ற தொழிலாளியிடம் ரூ.1500 கடன் வாங்கினார். அதன்பிறகு அவர் கடனை திருப்பி கொடுக்கவில்லை.
சம்பவத்தன்று உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் கிராமத்தில் இருந்து ஈஸ்வரகண்டநல்லூருக்கு மினி பஸ்சில் சுந்தரம் பயணம் செய்தார். அப்போது ஏகாம்பரம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த ஏகாம்பரம், திடீரென சுந்தரத்தின் கை சுண்டு விரலை கடித்து துப்பினார். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏகாம்பரத்தை கைது செய்தனர்.
Related Tags :
Next Story