பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி கைது


பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி கைது
x

பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரங்கொண்டான் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் இளையபாரதி (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு பயிலும் 17 வயது மாணவியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த சிறுமியை இளையபாரதி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்து இளையபாரதி மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகிறார்.


Next Story