சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது


சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது
x

சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் மகன் ஜெயக்குமார்(வயது 22). கூலி தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியை கட்டாயப்படுத்தி தனது மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று புதுக்குடி கரைமேடு பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான முந்திரி காட்டில் உள்ள தனி வீட்டில் வைத்து கடந்த 10 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அவரது தாய் சாந்தியும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த நிலையில் தனது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், ஜெயக்குமார் சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜெயக்குமார், சாந்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story