இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது
தூசி அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
தூசி
வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே பில்லாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் அவரது உறவினர் மோரணம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் வந்து, ஆபாச வீடியோக்களை காட்டி உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
ேமலும் ஆசைக்கு இணங்காவிட்டால் உன்னை பற்றி வெளியே தவறாக சொல்லிவிடுவேன் என்று கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அவர் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் சுரேஷ் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தூசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
Related Tags :
Next Story