மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
கரூர்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே உள்ள கோப்பு கிராமத்தை சேர்ந்தவர் மணி (58). கூலித்தொழிலாளி. இவர் கரூர் மாவட்டம், குளித்தலை பொய்யாமொழியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்து ேவலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று மண்மங்கலம் அருகே உள்ள கடம்பன்குறிச்சியில் மணல் அள்ளும் வேலைக்காக மணி ஒரு மாட்டு வண்டியில் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மணி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த மணியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story