கண்மாயில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து தொழிலாளி பலி
கண்மாயில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து தொழிலாளி பலியானார்
மதுரை
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டியை அடுத்த மணப்பட்டியை சேர்ந்த அய்யாவு மகன் தென்னரசு (வயது48). சமையல் வேலை செய்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவியும் 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக செல்வி அவரது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.தென்னரசுக்கு மதுபழக்கம் உள்ள நிலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தபோது ஊரின் அருகே உள்ள கண்மாயில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் பாய்ந்தது. இதில் நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் தென்னரசுவின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story