வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
x

வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கலை சேர்ந்தவர் செல்வம் (வயது 26). இவர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். அப்போது அங்கு அமர்ந்திருந்த தொழிலாளி பப்பி என்ற ராஜா (24) வேகமாக மோட்டார்சைக்கிளில் செல்ல வேண்டாம் என கூறினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் மோட்டார்சைக்கிளில் செல்வம் வேகமாக வந்துள்ளார். இதனால் பப்பி என்ற ராஜா அவரை வழிமறித்தார். அப்போது செல்வம் வேகமாக சென்று எதிரே இருந்த சுவற்றில் மோதினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து செல்வத்தின் தந்தை அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் பப்பி ராஜா என்பவரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி காஜிரா ஆர் ஜி ஜி விசாரித்து பப்பி என்ற ராஜாவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Related Tags :
Next Story