லாரி மோதி தொழிலாளி சாவு


தட்டார்மடம் அருகே லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக உடல் நசுங்கி பலியானார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகேயுள்ள பெரியதாழையை சேர்ந்தவர் தாசன்(வயது 85). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பெரியதாழையில் கிழக்கு கடற்கரை சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று தாசன் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தட்டார்மடம் ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான தங்கமணி நாடார் மகன் வேல்முருகன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story