கூலித்தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


கூலித்தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x

9-ம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

போக்சோ வழக்கு

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி உடையநேரி காலனியை சேர்ந்தவர் சிவா என்கிற சிவகண்ணன் (வயது 31). கூலித்தொழிலாளியான இவர், புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 13 வயதுடைய 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்துள்ளார். மாணவி பள்ளிக்கு செல்லும் போது, வரும் போது சிவா பின்தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.

மேலும் சம்பவத்தன்று மாணவியை தகாத வார்த்தையால் திட்டி, தன்னை காதலிக்க வற்புறுத்தி மிரட்டினார். இது தொடர்பாக மாணவியின் தாய் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

3 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார்.

இதில் சிவாவுக்கு தகாத வார்த்தையில் திட்டியதற்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஒரு வாரமும், காதலிக்க வற்புறுத்தி மிரட்டியதில் போக்சோ பிரிவில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.


Next Story