மகளுக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் தொல்லை
ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 54 வயதுடைய தொழிலாளி ஒருவர், தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து 11.8.19 அன்று வந்த புகாரின் ேபரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். ஆயுள் தண்டனை பெற்றுள்ள 54 வயது தொழிலாளி ஏற்கனவே ஒரு கொலை வழக்கு தொடர்பாக 16 வருடம் சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.