கூலித்தொழிலாளி தற்கொலை


கூலித்தொழிலாளி தற்கொலை
x

நோயால் அவதிப்பட்ட கூலித்தொழிலாளி தற்கொைல செய்து கொண்டார்.

தேனி

கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 7 ஆண்டுகளாக ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கான அவர், காமயகவுண்டன்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இவர், 2 முறை குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்துள்ளதாக கூறப்படுகிறது. நோய் கொடுமையால் அவதிப்பட்ட லட்சுமணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது அரளிவிதையை அரைத்து குடித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே லட்சுமணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லட்சுமணனின் மகன் சண்முகவேல், கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.


Next Story