சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
x

கோவில்பட்டி அருகே சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி மகன் முத்து மாரியப்பன் (வயது 21). கட்டிடத் தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். இந்தநிலையில் சிறுமியை கடந்த 8-ந் தேதி திருமணம் செய்துள்ளார்.

சிறுமி திருமணம் குறித்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய சமூக நல அலுவலர் இந்திராவுக்கு தகவல் கிடைத்தது. அவர் இதுபற்றி விசாரணை நடத்தி, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் பத்மாவதி விசாரணை நடத்தி, முத்துமாரியப்பன் மீது குழந்தை திருமண தடைச்சட்டம், போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.


Next Story