பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை என கீழ் கோர்ட்டு விதித்த தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை என கீழ் கோர்ட்டு விதித்த தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

தொழிலாளிக்கு ஜெயில்

குமரி மாவட்டம் ஆற்றூர் புல்லாணிவிளையை சேர்ந்தவர் சிவசிங் (வயது 49). தொழிலாளியான இவர் கடந்த 15.3.1999 அன்று வீடு புகுந்து ஆற்றூரை சேர்ந்த ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தார்.

இதுதொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசிங்கை கைது செய்தனர். கடந்த 2001-ம் ஆண்டு இதுதொடர்பாக பத்மநாபபுரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் சிவசிங்கை குற்றவாளி என தீர்மானித்து அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

ஐகோர்ட்டு உறுதி செய்தது

இந்த தண்டனையை எதிர்த்து சிவசிங் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பான வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த 28-ந் தேதி கீழ் கோர்ட்டு விதித்த தண்டனையை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

அதே சமயத்தில் குற்றவாளி சிவசிங் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இந்தநிலையில் நேற்று காலை திருவட்டார் போலீஸ் சிறப்பு சப்-இஸ்பெக்டர்கள் கருணாகரன், டேவிட், ஏட்டுகள் பிரபுதாஸ், சுபின் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆற்றூர் புல்லாணிவிளையில் இருந்த சிவசிங்கை கைது செய்தனர். பின்னர் அவரை பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிவசிங்குக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story