சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில்


தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டியில் 10 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தொழிலாளிக்கு தூத்துக்குடி கோர்ட்டில் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

கோவில்பட்டி இலுப்பையூரணி தாமஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானமுத்து. இவருடைய மகன் சண்முகராஜ் (வயது 52). தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சண்முகராஜை கைது செய்தனர்.

3 ஆண்டு ஜெயில்

பின்னர் சண்முகராஜ் மீது தூத்துக்குடியிலுள்ள போக்சோ கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட சண்முகராஜூவுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்துலட்சுமி ஆஜர் ஆனார்.


Next Story