தேவதானப்பட்டியில் மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி


தேவதானப்பட்டியில் மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி
x

தேவதானப்பட்டியில் மனைவியை தொழிலாளி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 35). இவரும், தேவதானப்பட்டியை சேர்ந்த செல்வியும் (30) காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு, செல்வி கோபித்து கொண்டு தேவதானப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். இதற்கிடையே நேற்று தேவதானப்பட்டிக்கு வந்த ராமானுஜம், தனது மனைவி செல்வியை சந்தித்து தன்னுடன் வாழ வருமாறு வலியுறுத்தினார். ஆனால் செல்வி அதற்கு மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமானுஜம், தனது மனைவியை கத்தியால் குத்தினார்.

இதில் படுகாயமடைந்த செல்வியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ராமானுஜத்தை தேடி வருகின்றனர்.


Next Story