அடிப்படை வசதிகள் இல்லாததால் பயன்பாட்டிற்கு வராத பள்ளி கட்டிடம்


அடிப்படை வசதிகள் இல்லாததால்  பயன்பாட்டிற்கு வராத பள்ளி கட்டிடம்
x

தேவதானப்பட்டி அருகே அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளி கட்டிடம் பயன்பாடின்றி உள்ளது

தேனி

தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி உயர்நிலைப் பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு ஏற்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக ரூ. 82 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதையடுத்து அந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனிக்கு வருகை தந்தபோது காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

கட்டிடம் திறக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை. இதனால் பள்ளி கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது. எனவே அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்


Next Story