நாகை, வேளாங்கண்ணி பஸ் நிலையங்களில் பாலூட்டும் அறைகள் பூட்டிக்கிடப்பதால் பெண்கள் அவதி


நாகை, வேளாங்கண்ணி பஸ் நிலையங்களில் பாலூட்டும் அறைகள் பூட்டிக்கிடப்பதால் பெண்கள் அவதி
x
தினத்தந்தி 8 Aug 2023 1:00 AM IST (Updated: 8 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

நாகை, வேளாங்கண்ணி பஸ் நிலையங்களில் பாலூட்டும் அறைகள் பூட்டிக்கிடப்பதால் பெண்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

நாகப்பட்டினம்

நாகை, வேளாங்கண்ணி பஸ் நிலையங்களில் பாலூட்டும் அறைகள் பூட்டிக்கிடப்பதால் பெண்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

உலக தாய்ப்பால் வாரம்

குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.

அதன்படி நாகை மாவட்டத்தில் தாய்ப்பால் வார விழா கலெக்டர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரிகளில் கடந்த வாரம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் கூடும் முக்கிய வீதிகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.

பாலூட்டும் அறை

ஒரு புறம் தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் விமரிசையாக நடத்தப்பட்டாலும் பஸ் நிலையங்களில் உள்ள தாய்மார்களுக்கான பிரத்யேக பாலூட்டும் அறை பராமரிப்பின்றி காணப்படுவது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நாகை புதிய பஸ் நிலையம், வேளாங்கண்ணி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பாலூட்டும் அறைகள் உள்ளன. இந்த அறைகள் பூட்டிக்கிடப்பதால் பெண்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த அறைகள் கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டன. இதில் நாகை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறையை சுற்றி மதுபாட்டில்கள் கிடக்கின்றன.

திறக்க வேண்டும்

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்ல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் பஸ் நிலையங்களில் பயன்பாடு இன்றி பூட்டிக்கிடக்கும் பாலூட்டும் அறைகளை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்து முறைப்படி பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story