வாணியம்பாடி நகராட்சி பகுதியில் செல்லும் ஏரி கால்வாய்கள் தூர்வார கலெக்டர் உத்தரவு


வாணியம்பாடி நகராட்சி பகுதியில் செல்லும் ஏரி கால்வாய்கள் தூர்வார கலெக்டர் உத்தரவிட்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் செல்லும் ஏரி கால்வாய்கள் தூர்வார கலெக்டர் உத்தரவிட்டார்.

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள் செல்கிறது. இந்த கால்வாய்களில் பல இடங்களில் அடைப்புகள் உள்ளதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று காலை நகரப்பகுதிகளில் கால்வாய்களை பார்வையிட்டார். அப்போது கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தூர்வாரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக வாணியம்பாடி நியூடவுன் காந்திநகர் தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்து வரும் சமையல் அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

ஆய்வின் போது சப்- கலெக்டர் பிரேமலதா, நகராட்சி கமிஷனர் மாரிசெல்வி, என்ஜினியர் சங்கர், நகர கூட்டுறவு வங்கி தலைவரும், கவுன்சிலருமான வி.எஸ்.சாரதிகுமார் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் செல்லும் ஏரி கால்வாய்கள் தூர்வார கலெக்டர் உத்தரவிட்டார்.


Next Story