எம்.களத்தூரில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி
எம்.களத்தூர் பகுதியில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஏரிய நிரம்பியது.
திருச்சி
காட்டுப்புத்தூர் அருகே எம்.களத்தூர் பகுதியில் உள்ள ஏரி 360 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவு நிரம்பியது. இதனால் சேர்வைக்காரன்பட்டி, பில்லுக்காடு, எம்.களத்தூர் உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் ஏரிக்கு வந்து தண்ணீர் நிரம்பி வழிவதை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். இந்த ஏரியின் மூலம் சுமார் 770 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அந்த பகுதியில் மல்லிகை, பருத்தி, நெல், வாழை போன்ற பல வகையான பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்வார்கள். கொல்லிமலை பகுதியில் பெய்த மழையை தொடர்ந்து தூசூர், வலையபட்டி, அரூர், ஆண்டாபுரம் வழியாக எம்.களத்தூர் ஏரிக்கு வந்த நீரால் ஏரி நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story