சுப்பிரமணிய சாமி கோவிலில் லட்ச்சார்ச்சனை


சுப்பிரமணிய சாமி கோவிலில் லட்ச்சார்ச்சனை
x

சுப்பிரமணிய சாமி கோவிலில் லட்ச்சார்ச்சனை நடைபெற்றது.

வேலூர்

வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டியையொட்டி லட்ச்சார்ச்சனை நடைபெற்றது. உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

இதில் பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் சுப்பிரமணியசாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.


Next Story