சனத்குமரேஸ்வரசுவாமி கோவிலில் லட்சார்ச்சனை
செ.புதூர் சனத்குமரேஸ்வரசுவாமி கோவிலில் லட்சார்ச்சனை நடந்தது.
தஞ்சாவூர்
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள செ.புதூரில் சவுந்திரநாயகி சமேத சனத்குமரேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. குபேர தலமாக போற்றப்படும் இந்த ஆலயத்தில் குருப்பெயர்ச்சி சிறப்பு லட்சார்ச்சனை நேற்று முன்தினம் நடைபெற்றது. குரு பகவானுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஏகதின லட்சார்ச்சணை நடைபெற்றது. இதை தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த குரு பகவானுக்கு மகா தீபாராதனை காண்ப்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் சாந்தா மற்றும் ஆலய பணியாளர்கள், செ. புதூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story