வெங்கடாஜலபதி கோவிலில் லட்சார்ச்சனை


வெங்கடாஜலபதி கோவிலில் லட்சார்ச்சனை
x

தூத்துக்குடி வெங்கடாஜலபதி கோவிலில் லட்சார்ச்சனை நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி புதுக்கிராத்தில் உள்ள சங்கரமடத்தைச் சேர்ந்த வெங்கடாஜலபதி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராகசுதா சங்கம் சார்பில் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று உலக நன்மை வேண்டியும், நீர்வளம், நிலவளம் செழிக்க வேண்டியும், மக்கள் நோயின்றி வாழ வேண்டியும் லட்சார்ச்சனை நடந்தது.

நிகழ்ச்சியில், 108 பெண்கள் கலந்து கொண்டு குங்குமார்ச்சனை செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராகசுதா சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


Next Story