லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதம்


லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதம்
x

என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதம் ஆனது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதம் ஆனது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து கிருஷ்ணராஜபுரம், பங்காரு பேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக தினமும் சென்னைக்கு லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்கிறது. வழக்கம்போல் ரெயில் நேற்று காலை 6.20 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டது.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே என்ஜினில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் காலை 6.41 மணிக்கு கிருஷ்ணராஜபுரம் ரெயில் நிலையத்திற்கு வர வேண்டிய அந்த ரெயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக 7.51 மணியளவில் வந்தடைந்து. அதன் பிறகு அங்கிருந்து ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது.

ஆந்திர மாநிலம் குப்பம் ரெயில் நிலையத்தை கடந்தபோது மீண்டும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜோலார்பேட்டை அருகே சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் சுமார் 1 மணி நேரம் தாமதமாக ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது.

இதனால் காலை 8.38 மணியளவில் வரவேண்டிய லால் பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் 11.14 மணிக்கு ஜோலார்பேட்டையை வந்தடைந்தது. அதன் பிறகு சென்னை நோக்கி புறப்பட்டது. சென்னை ரெயில் நிலையத்துக்கு நண்பகல் 12.15 மணியளவில் சென்றடைய வேண்டிய ரெயில் பிற்பகல் 2.28 மணியளவில் சென்றடைந்தது. இதனால் சுமார் 2 மணி நேரம் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக சென்றதால் ரெயில் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.


Next Story