கீழ்மாம்பட்டுஅம்மச்சார் அம்மன் கோவிலில் விளக்கு பூஜை
கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.
விழுப்புரம்
செஞ்சி,
செஞ்சியை அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் உள்ள அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், சீனிவாச பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவம் கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை மந்திரி ஏ.கே. மூர்த்தியின் துணை வியார் பத்மினிதேவி மூர்த்தி தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில், இன்று இரவு சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் வதி உலாவும், நாளை(ஞாயிற்றுக் கிழமை) காலை 8.30 மணிக்கு தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை முன்னாள் மத்திய இணை மந்திரி ஏ.கே. மூர்த்தி மற்றும் அனைத்து உபயதாரர்கள், கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story