சாய்பாபா கோவிலில் விளக்கு பூஜை


சாய்பாபா கோவிலில் விளக்கு பூஜை
x

திருச்செந்தூர் சாய்பாபா கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் பாளை ரோட்டில் உள்ள செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் அருகே ஷிர்டி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை புனித நதிகளான கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய முன்று நதிகள் ஒன்று சேர்ந்து உள்ள அலகாபாத்தில் இருந்து எடுத்து வரப் பெற்ற புனித நீர் கலசங்களில் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் புனித நீரால் ஷிர்டி சாய்பாபாவிற்க்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5 மணிக்கு ஏராளமான பெண்கள் தமிழ்நாட்டு பாரம்பரிய குத்துவிளக்கு, கேரளா வாழைப்பூ விளக்கு வைத்து விளக்கு பூஜை நடத்தினர். பாபாவிற்க்காக கேந்தி, ரோஜா மலர்களால் புஷ்பாஞ்சலி நடந்தது. விளக்கு பூஜை செய்த பெண்களுக்கு இலவசமாக சேலைகள் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு மதியம் அன்னதானமும், இரவு பிசாதமும் வழங்கப்பட்டது.


Next Story