நிலத்தகராறில் தம்பியே வெட்டிக்கொன்றது அம்பலம்
அஞ்செட்டி அருகே ஆட்டோ டிரைவரை தம்பியே வெட்டிக்கொன்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே ஆட்டோ டிரைவரை தம்பியே வெட்டிக்கொன்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆட்டோ டிரைவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் முரளி (வயது 37). ஆட்டோ டிரைவர். இவர் தனது நிலத்தில் துவரை சாகுபடி செய்திருந்தார். நேற்று முன்தினம் வீட்டின் அருகில் கட்டி வைத்திருந்த மாட்டை பிடித்து வருவதற்காக முரளி சென்றார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் முரளியை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு
அப்போது நிலத்தகராறில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. ெதாடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் முரளிக்கும், அவரது தம்பி தேவராஜ் (35) என்பவருக்கும் நிலம் தொடர்பாக தகராறு இருந்ததும், அவர் முரளியை வெட்டிக்கொன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து தேவராஜை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீஸ் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் தலைமறைவாக உள்ள தேவராஜை வலைவீசி தேடி வருகின்றனர். நிலத்தகராறில் அண்ணனை தம்பியே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.