நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு


நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு
x

நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி நேதாஜிநகர் வடக்கு பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு சொந்தமாக உள்ள இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனை எடுக்க வேண்டும் என நேற்று வாணியம்பாடிக்கு வந்த மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம், நகரமன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story