நில அளவை அலுவலர்கள் தர்ணா
கள்ளக்குறிச்சியில் நில அளவை அலுவலர்கள் தர்ணா பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், டி.ஜி.பி.எஸ் கருவியை அனைத்து தாலுகாக்களுக்கும் வழங்க வேண்டும், களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் இந்திரகுமார், தேவராஜன், சக்திவேல், ராஜா, மகாலிங்கம், ரவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story