நிலவில் தரை இறங்கிய விக்ரம் லேண்டருக்கு நாசரேத்தில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள்
நிலவில் தரைஇறங்கிய விக்ரம் லேண்டருக்கு நாசரேத்தில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
நாசரேத்:
நிலவில் தரைஇறங்கிய விக்ரம் லேண்டருக்கு நாசரேத்தில் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
சந்திரயான்-3
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நேற்று முன்தினம் நிலவில் தரையிறங்கியது. இதை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
இதேநேரத்தில் அரசியல் கட்சியினரும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அதுபோல் உலக நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.
உதிரி பாகங்கள்
இந்த நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் பயன்படுத்தப்பட்ட சில உதிரி பாகங்கள் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதாவது, லேண்டரில் லேசர் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய எல்.பி.ஜி. பிளேட் மற்றும் உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நாசரேத்தில் இயங்கும் கைத்தொழில் பாடசாலை அட்வான்ஸ் ட்ரெயினிங் சென்டர் ஊழியர்களால் தயாரிக்கப்பட்டதாகும். இதனால் அதன் நிர்வாகத்தினர், ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.