நிலப்போர்வை கத்தரி சாகுபடி
திருமருகல் அருகே நிலப்போர்வை கத்தரி சாகுபடி
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
திருமருகல் வட்டாரத்தில் முதன்முறையாக மாவட்ட தோட்டக்கலைத்துறை பரிந்துரையின் பேரில் அட்மா திட்டத்தின் கீழ் கொத்தமங்கலம் வருவாய் கிராமத்தில் முழு மானியத்தில் சோதனை அடிப்படையில் நிலப்போர்வை வழங்கப்பட்டது. அதனை ஒரு விவசாயி தனது வயலில் அமைத்து கத்தரி செடிகள் நடவு செய்துள்ளார். நிலப்போர்வை அமைத்து சாகுபடி செய்தால் களைகள் வளர்ச்சி குறையும். நீர் ஆவியாதல் குறையும். பூச்சி-நோய் தாக்குதல் குறையும். மகசூல் அதிகரிக்கும். மேலும் விவசாயிகள் மாற்று பயிராக தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யவும், விதைகள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் பெற விவசாயிகள் தோட்டக்கலை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story