கல்லூரி மாணவியிடம் மடிக்கணினி திருட்டு
கல்லூரி மாணவியிடம் மடிக்கணினி திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி
ஊட்டி,
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுமியா. கல்லூரி மாணவி. இவர் ஈரோட்டில் இருந்து அரசு பஸ் மூலம் ஊட்டிக்கு வந்து உள்ளார். அப்போது குன்னூர் பஸ் நிலையம் வந்த போது, அங்கு பயணிகள் சிலர் இறங்கி உள்ளனர். அங்கு சவுமியா வைத்திருந்த மடிக்கணிணியை பையுடன் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதையடுத்து மடிக்கணிணியை ஆன் செய்ய முயன்ற போது, சவுமியாவின் செல்போனுக்கு தகவல் வந்தது. இதனால் மடிக்கணிணி திருட்டு போனதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story