மடிக்கணினி திருட்டு


மடிக்கணினி திருட்டு
x

மடிக்கணினி திருட்டுபோனது.

திருச்சி

அரியலூர் மாவட்டம், ராஜாஜிநகரை சேர்ந்தவர் ஹரிஹரன்(வயது 30). இவர் சம்பவத்தன்று திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்க சென்றார். அங்கு தனது மடிக்கணினியை மண்டபத்தில் நாற்காலி மீது வைத்துவிட்டு மணமக்களை வாழ்த்துவதற்காக மேடைக்கு சென்றார். பின்னர் திரும்ப வந்து பார்த்தபோது, மடிக்கணினி திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து ஹரிஹரன் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story