தென்பட்ட பெரிய வண்ணத்துப்பூச்சி
கோத்தகிரியில் தென்பட்ட பெரிய வண்ணத்துப்பூச்சியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
நீலகிரி
கோத்தகிரி,
கோத்தகிரி பகுதியில் இதமான சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக பலவித வடிவம் மற்றும் வண்ணங்களால் ஆன வண்ணத்துப்பூச்சிகள் பறந்து திரிந்து வருகின்றன. இந்தநிலையில் கோத்தகிரி பகுதியில் நேற்று 15 சென்டி மீட்டர் நீளம், 10 சென்டி மீட்டர் அகலம் கொண்டதும், அளவில் பெரிதாகவும் வண்ணத்துப்பூச்சி ஒன்று தென்பட்டது. வித்தியாசமான வடிவத்துடன், பச்சை நிறத்தில் மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்திருந்தது. இந்த வண்ணத்துப்பூச்சி சாதாரண வண்ணத்துப்பூச்சிகளை விட பெரிதாக காணப்பட்டதால், அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து சென்றனர். இதே வகை வண்ணத்துப்பூச்சி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலும் தென்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story