புத்தாண்டு கொண்டாட்டம்: மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்...!
புத்தாண்டையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் குவிந்துள்ளது.
சென்னை,
2023 புத்தாண்டையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கபப்ட்ட நிலையில் இன்று காலை அந்த தடை நீக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காலை முதலே மெரினா கடற்கரைக்கு வரும் மக்கள் வரத்தொடங்கியது. இந்நிலையில், மாலை நேரத்தில் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
புத்தாண்டையொட்டி மக்கள் அதிக அளவில் மெரினா கடற்கரையில் குவிந்துள்ளனர். கடல் அலையில் கால் நனைத்தபடி, மெரினா கடற்கரையில் மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். மெரினா கடற்கரை மட்டுமின்றி திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கடற்கரையிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.