திருச்செந்தூர் முருகன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திருச்செந்தூர் முருகன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த பக்தர்கள், நீண்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி,

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடற்கரைக் கோவில் என்பதால் பக்தர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்து கடலில் நீராடிவிட்டு முருகனை தரிசித்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதோடு, இன்று சனிக்கிழமை வார விடுமுறை என்பதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திருச்செந்தூருக்கு வருகை தந்தனர்.

குறிப்பாக ராஜபாளையம், சாத்தூர், சங்கரன்கோவில், நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு வருகை தரும் பக்தர்கள், கடலில் புனித நீராடி, நேர்த்திக் கடன்களை செலுத்திவிட்டு, சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

அதே போல் புத்தாண்டை முன்னிட்டு முருகனை தரிசித்து வழிபாடு செய்வதற்காக வந்த பக்தர்கள், கோவில் வளாகத்தில் நீண்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கடற்கரை முழுவதும் பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்ட நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்று அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டன.


Next Story