லாரி ேமாதி விவசாயி பலி
லால்குடி அருகே லாரி மோதி விவசாயி பலியானார்.
லால்குடி அருகே வெள்ளனூர் இடங்கிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மருதை. இவரது மகன் மணி (வயது 30). விவசாயியான இவரும், அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி (50) என்பவரும் வெள்ளனூர் பகுதியில் செம்மறி ஆட்டு கிடை அமைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு மணி, முத்துசாமி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ஆட்டுகிடையை பார்க்க சென்றனர். மோட்டார் சைக்கிளை மணி ஓட்டியதாக கூறப்படுகிறது.
திருச்சி - சிதம்பரம் புதிய நான்கு வழிச்சாலையில் சென்ற போது, அரியலூரில் இருந்து திருச்சியை நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மணி அதே இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த முத்துசாமி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.