செங்கல் ஏற்றிவந்த லாரி கழிவுநீர் கால்வாயில் சாய்ந்தது


செங்கல் ஏற்றிவந்த லாரி கழிவுநீர் கால்வாயில் சாய்ந்தது
x

சூளகிரியில் செங்கல் ஏற்றிவந்த லாரி கழிவுநீர் கால்வாயில் சாய்ந்தது.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

கர்நாடக மாநிலம் மாலூரில் இருந்து, செங்கல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, நேற்று வந்து கொண்டு இருந்தது. சூளகிரியில் பேரிகை சாலையில் முனியம்மா சர்க்கிள் பகுதியில் உள்ள வளைவில் திரும்பியது. அப்போது அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் லாரி சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு அதில் செங்கல் பாரம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து லாரியை கால்வாயில் இருந்து பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டது.


Related Tags :
Next Story