லாரி மோதி முதியவர் பலி
சிவகாசி அருகே லாரி மோதி முதியவர் பலியானார்.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள சின்னகாமன்பட்டியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (வயது 65). இவர் அதே பகுதியில் உள்ள அனுப்பன்குளம் கிராமத்துக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது அந்த வழியாக வந்த லாரி பஞ்சவர்ணம் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு விஸ்வநத்தத்தில் உள்ளதனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் முதலிப்பட்டியை சேர்ந்த ராஜவேல் என்பவர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story