கொடைரோடு அருகே மண் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு


கொடைரோடு அருகே மண் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு
x

கொடைரோடு அருகே மண் ஏற்றி வந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

திண்டுக்கல்

கொடைரோடு அருகே பொட்டிக்குளத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் பொட்டிக்குளத்தில் இருந்து சிறுமலை அடிவார பகுதிகளுக்கு செல்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் இருந்து கிராவல் மண், செம்மண்ணை ஏற்றிக்கொண்டு லாரிகள் அந்த சாலை வழியாக சென்று வந்தன. இதனால் புதிதாக போட்ட தார்சாலை சேதமடையும் அபாயம் ஏற்பட்டது.

இந்தநிலையில் இன்று பொட்டிக்குளம் வழியாக மண் ஏற்றி வந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story