குடற்புழு நீக்க நாள்


குடற்புழு நீக்க நாள்
x

குடற்புழு நீக்க நாள்

திருப்பூர்

உடுமலை

உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க நாள் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், வாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலையரசி தேசிய குடற்புழு நீக்க நாள் பற்றியும், கைகளை சுத்தமாக கழுவுதல், கை கழுவும் முறைகள் பற்றியும் எடுத்துக்கூறினார். மேலும் உணவு சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறைக்கு சென்று வந்த பின்பும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும், திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது என்றும் கூறினார். கைகளை எப்படி கழுவ வேண்டும் என்று மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பின்பு மாணவ-மாணவிகளுக்குகுடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. முடிவில் உதவி ஆசிரியர் கு.கண்ணபிரான் நன்றி கூறினார். அப்போது அவர் மாணவர்களிடம், சுத்தமாக இருப்பதால், எந்த நோயும் வராமல் நலமாக இருக்கலாம். திறந்த வெளியில் விற்கும் உணவுப்பொருட்களை வாங்கி சாப்பிடுவது கூடாது என்று எடுத்துரைத்தார்.



Next Story