தாமதமாக வந்த மன்னை, கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ்
நீடாமங்கலத்திற்கு 1½ மணி நேரம் தாமதமாக வந்த மன்னை, கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ்
திருவாரூர்
நீடாமங்கலம்:
சென்னையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நாள்தோறும் அதிகாலை 4.35 மணிக்கு நீடாமங்கலம் ரெயில் நிலையம் வருவது வழக்கம். ஆனால் நேற்று காலை 6.12 மணிக்கு நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கு மேல் தாமதமாக ரெயில் வந்தது. இதே போல் கோவையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.30 மணிக்கு நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு வருவது வழக்கம். ஆனால் இந்த ரெயில் நேற்று காலை 7.57 மணிக்கு நீடாமங்கலம் வந்தது. இருப்பு பாதை பணிகள் காரணமாக ரெயில்கள் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story