போலீஸ் நிலையங்களில் 'சைபர் கிரைம்' பிரிவு தொடக்கம்


போலீஸ் நிலையங்களில் சைபர் கிரைம் பிரிவு தொடக்கம்
x

வேலூர் மாவட்ட போலீஸ் நிலையங்களில் சைபர் கிரைம் பிரிவு தொடக்கப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர்

வேலூர் மாவட்ட போலீஸ் நிலையங்களில் சைபர் கிரைம் பிரிவு தொடக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சைபர் கிரைம் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 69 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

போலீஸ் நிலையங்களுக்கு இணைய குற்றம் தொடர்பாக வரும் பொதுமக்களின் புகார்களை உடனடியாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், பணம் இழப்பு தொடர்பான புகார்களை 1930 என்ற எண்ணில் புகார் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அவர்களுக்கு எவ்வாறு புகாரை பதிவு செய்ய வேண்டும் என்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பேசியதாவது:-

சைபர் கிரைம் (இணையவழி குற்றங்கள்) பற்றி பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை.

சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் எங்கு சென்று புகார் தெரிவிக்கவேண்டும் என தெரியாததால் அவர்களின் சிரமத்தை போக்கவேண்டி ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் தனியாக சைபர் கிரைம் பிரிவு தொடங்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

ரசீது வழங்க வேண்டும்

அதன்படி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தனியாக இந்தபிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் புகார் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகாரை பெற்று உடனடியாக மனு ரசீது வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சைபர் கிரைம் குற்றங்களுக்கு உடனடியாக காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்படவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜன், இன்ஸ்பெக்டர் அபர்ணா மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story