முத்தலக்குறிச்சியில் அதிவேக இணைய சேவை திட்டப்பணி தொடக்கம் கலெக்டர் அரவிந்த் பங்கேற்பு
முத்தலக்குறிச்சியில் அதிவேக இணைய சேவை திட்டப்பணி தொடக்க விழா நடந்தது. இதில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டார்.
தக்கலை:
முத்தலக்குறிச்சியில் அதிவேக இணைய சேவை திட்டப்பணி தொடக்க விழா நடந்தது. இதில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டார்.
தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் அதிவேக இணைய சேவையை வழங்கும் தமிழக அரசின் திட்டத்தில் முதல் கட்டமாக திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி மற்றும் குமரி மாவட்டம் முத்தலக்குறிச்சி ஊராட்சிகளில் கண்ணாடி இழை கம்பிவடம் மூலம் அதிவேக அலைக்கற்றை வழங்கும் பாரத்நெட் திட்டப்பணிகளை நேற்று சென்னையில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதைதொடர்ந்து நேற்று முத்தலக்குறிச்சி ஊராட்சியில் அதன் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பத்மநாபபுரம் நகரசபை தலைவர் அருள் சோபன், தக்கலை ஊராட்சி ஒன்றிய தலைவர் அருள் ஆன்டணி, ஆணையர் அன்பு, முத்தலக்குறிச்சி ஊராட்சி தலைவர் சிம்சன், மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் நாராயணன், அலுவலர் விஜி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, துணைச்செயலாளர் ஜுடு சேம், நகராட்சி மாணவரணி அமைப்பாளர் ரயிஸ் சுபிஹான், முத்தக்குறிச்சி ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
---