திருவண்ணாமலையில் சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனம்


திருவண்ணாமலையில் சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனம்
x

திருவண்ணாமலையில் சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜமுனா தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்க நிகழ்ச்சி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜமுனா தலைமை தாங்கி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பிரசார வாகனம் வருகிற 13-ந்தேதி வரை மாவட்டத்தில் அனைத்து முக்கிய பகுதிகளுக்கும் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story