எருமப்பட்டியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்


எருமப்பட்டியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்
x

எருமப்பட்டியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நாமக்கல்

எருமப்பட்டி:

நாமக்கல் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் எருமப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் குணாளன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான விஜய் கார்த்திக் கலந்து கொண்டார். அப்போது அவர் இளம் வயது திருமணம் மற்றும் சட்ட பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசினார். சட்ட பணிகள் ஆணைக்குழு வக்கீல் ராதிகா தேவி வாழ்த்துரை வழங்கினார். இதில் வட்டார இயக்க மேலாளர் சிவலிங்கம் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை சட்ட பணிகள் ஆணைக்குழு தன்னார்வ உறுப்பினர் பூபதி ராஜா செய்திருந்தார்.


Next Story